தமிழ் நோய் யின் அர்த்தம்

நோய்

பெயர்ச்சொல்

 • 1

  பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறை/(தாவரங்களில்) பாகங்களை அல்லது வளர்ச்சியைப் பாதிப்பது.

  ‘உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால் நோய்கள் எளிதாக வரும்’
  ‘மலச்சிக்கல்தான் மூலநோய்க்கு முக்கியக் காரணமாக அமைகிறது’
  ‘கோமாரி நோய் விலங்குகளைத் தாக்கும்’
  ‘இது தென்னை மரங்களை மட்டும் தாக்கும் நோய் ஆகும்’
  ‘சில வைரஸ்களால் கண்நோய்கள் ஏற்படுகின்றன’
  ‘இருதய நோய்’