தமிழ் நைசாக யின் அர்த்தம்

நைசாக

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவரிடம் தனக்குத் தேவையானதை அவருக்கு) உறுத்தாத வகையில்; திறமையாக.

  ‘அவரிடம் நைசாகப் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொண்டாள்’

 • 2

  பேச்சு வழக்கு (பிறர் அறியாதவண்ணம்) சாமர்த்தியமாக.

  ‘எங்கே நைசாக நழுவப் பார்க்கிறாய்?’
  ‘என் பையிலிருந்து நைசாகப் பணத்தை எடுத்திருக்கிறான்’

 • 3

  பேச்சு வழக்கு (மாவு போன்றவற்றைக் குறிப்பிடும்போது) மிகவும் குழைவாக.

  ‘பூண்டுத் துவையலை மிகவும் நைசாக அரைத்துக்கொள்ளவும்’