நோக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நோக்கு1நோக்கு2

நோக்கு1

வினைச்சொல்நோக்க, நோக்கி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பார்த்தல்.

  ‘எந்தத் திசையில் நோக்கினாலும் பச்சைப்பசேலென்ற நெல் வயல்கள்’
  ‘அவன் தலை நிமிர்ந்து என்னை நோக்கினான்’
  ‘அவனைப் பொசுக்கிவிடுவது போல் நோக்கினாள்’

 • 2

  உயர் வழக்கு கவனித்தல்.

  ‘ஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவை நோக்கும்போது சில அம்சங்கள் தெளிவாகின்றன’
  ‘உலக வரலாற்றை நோக்கினால் எந்தச் சர்வாதிகார அரசும் நிலைத்ததில்லை என்பது நமக்குப் புலப்படும்’

 • 3

  உயர் வழக்கு அணுகுதல்.

  ‘எந்த ஒரு பிரச்சினையையும் நிதானத்துடன் நோக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’
  ‘அமைப்பியல் அடிப்படையில் இந்தப் பாடலை நோக்குவோம்’

நோக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நோக்கு1நோக்கு2

நோக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  கண்ணோட்டம்.

  ‘உன்னுடைய நோக்கில் நீ செய்ததெல்லாம் உனக்குச் சரியாகத்தான் தெரியும்’
  ‘உலக நோக்கு என்பது அவர் கவிதைகளில் அறவே இல்லை’
  ‘திரைப்படங்களைப் பற்றி நீ கொண்டிருக்கும் குறுகிய நோக்கை மாற்றிக்கொள்’

 • 2

  உயர் வழக்கு நோக்கம்.

  ‘ஒரு ஆராய்ச்சியின் நோக்கைப் பொறுத்துத்தான் அதன் போக்கும் அமையும்’