தமிழ் பக்கமேளம் வாசி யின் அர்த்தம்

பக்கமேளம் வாசி

வினைச்சொல்வாசிக்க, வாசித்து

  • 1

    (ஆதாயம் கருதி ஒருவருக்கு) ஆதரவு தருதல்; ஜால்ராப்போடுதல்.

    ‘எல்லா விஷயத்திலும் இரண்டு பேரும் கூட்டு. அதனால்தான் இவன் அவனுக்குப் பக்கமேளம் வாசித்துக்கொண்டிருக்கிறான்’
    ‘கட்சித் தலைவர் எதைச் சொன்னாலும் பக்கமேளம் வாசிக்க நாலுபேர் இருப்பார்கள்’
    ‘ஊரில் வசதி படைத்தவர் என்பதற்காக அவர் சொல்வதற்கெல்லாம் பக்கமேளம் வாசிப்பது நன்றாக இல்லை’