தமிழ் பக்கவாத்தியம் யின் அர்த்தம்

பக்கவாத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    (கச்சேரியில் முக்கிய இசைக் கலைஞருக்கு) துணையாக வாசிக்கப்படும் கருவி.

    ‘பாடகருக்கு இன்று சரியான பக்கவாத்தியம் அமையவில்லை’
    ‘வீணைக் கச்சேரிக்குப் பக்க வாத்தியமாக மிருதங்கம் மட்டும் போதுமா அல்லது கடமும் வேண்டுமா?’
    உரு வழக்கு ‘எப்போதும் அவனுக்காகப் பரிந்து பேசுகிறாயே, நீ என்ன அவனுக்குப் பக்கவாத்தியமா?’