தமிழ் பக்கா யின் அர்த்தம்

பக்கா

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு தொடர்ந்து வரும் பெயர்ச்சொல் குறிக்கும் தன்மையை முழுமையாகப் பெற்றிருப்பதைக் காட்டும் அடை; சரியான; சுத்த.

  ‘பக்கா தமிழர்போல் தமிழ் பேசும் மராட்டியர்’
  ‘பக்கா ரௌடி’
  ‘பக்கா திருடன்’
  ‘இந்த ஊருக்குப் பக்கா ரோடு போட இன்னும் ஒரு வருடம் ஆகும்’