தமிழ் பக்குவப்படு யின் அர்த்தம்

பக்குவப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (அனுபவத்தால்) முதிர்ச்சி அடைதல்.

    ‘இன்னும் நாம் மக்களாட்சிக்குப் பக்குவப்படாத நிலையில் இருக்கிறோம்’
    ‘ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடும் அளவுக்கு என் மனம் இன்னும் பக்குவப்படவில்லை’
    ‘மேடையில் பேசிப்பேசிப் பட்டிமன்றங்களில் வாதாடும் அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கிறார்’