தமிழ் பகல் கொள்ளை யின் அர்த்தம்

பகல் கொள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றுக்காகக் கொடுக்கும் பணம்) அநியாயம் என்று கூறும் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலை.

    ‘இந்தச் சாதாரணச் சட்டையின் விலை ஐநூறு ரூபாய் என்றால், இது நிச்சயம் பகல் கொள்ளைதான்’
    ‘இரண்டு கிலோமீட்டர் தூரம் போவதற்கு நாற்பது ரூபாய் என்பது நிச்சயம் பகல் கொள்ளைதானே!’