தமிழ் பகு யின் அர்த்தம்

பகு

வினைச்சொல்பகுக்க, பகுத்து

 • 1

  உயர் வழக்கு பங்கிடுதல்; பகிர்தல்.

  ‘கிடைத்ததைப் பகுத்து உண்டு வாழ்வோம்’

 • 2

  வகைப்படுத்துதல்; பிரித்தல்.

  ‘திரட்டிய செய்திகளைச் சில தலைப்புகளின் கீழ் பகுத்துக்கொண்டான்’

 • 3

  (ஒன்றைச் சில பகுதிகளாக) வெட்டுதல்; பிளந்து பிரித்தல்.

  ‘மரச் சட்டத்தை முதலில் இரண்டாகப் பகுத்துக்கொள்ள வேண்டும்’

 • 4

  (ஒரு எண்ணை) வகுத்தல்.

  ‘இந்த எண்ணை மேலும் பகுக்க முடியாது’

 • 5

  இலக்கணம்
  (ஒரு சொல்லை) பிரித்தல்.

  ‘பகுக்க முடியாத சொல் ‘பகாப்பதம்’ எனப்படும்’