தமிழ் பகுதி யின் அர்த்தம்

பகுதி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றில் காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில்) பிரிக்கப்பட்டிருப்பது; பிரிவு.

  ‘தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது’
  ‘கட்டுரையின் முதல் பகுதியை எழுதி முடித்துவிட்டேன்’
  ‘வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது’
  ‘இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதியில் பல நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் உருவாயின’

 • 2

  (ஒன்றை ஒட்டிய) பக்கம்; இடம்.

  ‘வீட்டின் பின்பகுதியில் தோட்டம்’
  ‘இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழுப்பு நிலக்கரி பெருமளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’

 • 3

  இலக்கணம்
  மேலும் பகுக்க முடியாத சொல்.

  ‘‘படித்தான்’ என்பதில் ‘படி’ என்பது பகுதி’

 • 4

  கணிதம்
  (பின்னத்தில்) கோட்டுக்குக் கீழ் உள்ள எண்.

  ‘2/3 என்பதில் 3 என்பது பகுதி, 2 என்பது தொகுதி’