தமிழ் பங்கம் யின் அர்த்தம்

பங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  கேடு; தீங்கு; குந்தகம்.

  ‘நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தீய சக்திகள்’
  ‘வேலைக்குப் பங்கம் வராதவரையில் நல்லது’
  ‘அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டிக் கைதுசெய்யப்பட்டார்’

 • 2

  களங்கம்.

  ‘என்னுடைய புகழுக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன’