தமிழ் பங்களிப்பு யின் அர்த்தம்

பங்களிப்பு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
 • 1

  பெருகிவரும் வழக்கு ஒரு துறைக்கு அல்லது செயல்பாட்டுக்குத் தன் பங்காக உழைப்பு, சிந்தனை, பணம் முதலியவற்றை அளிக்கும் செயல்.

  ‘நவீன இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும்’
  ‘நம் இலக்கிய வரலாற்றில் நாட்டுப்புற இலக்கியத்தின் பங்களிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவந்திருக்கிறது’
  ‘சிற்பக் கலைக்கு இந்தியாவின் பங்களிப்பாகத் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கூறலாம்’
  ‘எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது’