தமிழ் பங்கு யின் அர்த்தம்

பங்கு

பெயர்ச்சொல்

 • 1

  (முழுமையில்) குறிப்பிட்ட அளவுள்ள பகுதி.

  ‘இந்த லாபத்தில் ஐந்து பேருக்கும் பங்கு உண்டு’
  ‘பூமி மூன்றில் இரண்டு பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் ஆனது’

 • 2

  (ஒரு அமைப்பு, செயல் ஆகியவற்றில்) ஒருவருக்கு இருக்கும் பொறுப்பு.

  ‘இன்றைய சமுதாயத்தில் எழுத்தாளனுக்கு இருக்கும் பங்கு மகத்தானது’
  ‘என்னுடைய வெற்றியில் அவனுக்குக் குறிப்பிடத் தக்க பங்கு உண்டு’
  ‘உன் பங்குக்கு எதையோ சொன்னோம் என்று இல்லாமல் உருப்படியாக யோசனை சொல்’
  ‘அந்த நிறுவனத்தில் நடந்த ஊழலில் அதன் மேலாளருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது’

 • 3

  (ஒரு நிறுவனத்தில் பொதுமக்களிடையே விற்கப்படும் அல்லது குறிப்பிட்ட சிலரிடையே பகிர்ந்துகொள்ளப்படும்) சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்.

 • 4

  கிறித்தவ வழக்கு
  பங்குத் தந்தையின் நேரடி நிர்வாகத்துக்கு உட்பட்ட மக்கள் வாழும் பகுதி.