தமிழ் பங்குகொள் யின் அர்த்தம்

பங்குகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (பணி, போராட்டம், நிகழ்ச்சி போன்றவற்றில்) கலந்துகொள்ளுதல்; கலந்துகொண்டு செயல்படுதல்.

  ‘விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர்’
  ‘விழாவில் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டும்’
  ‘இந்தப் போட்டியில் மொத்தம் ஏழு அணிகள் பங்குகொள்கின்றன’

 • 2

  (ஒன்று அல்லது ஒருவர் ஒரு செயலில்) ஈடுபடுதல்.

  ‘‘சிரித்தல்’ என்ற செயலில் முகத்தின் அனைத்துத் தசைகளும் பங்குகொள்கின்றன’

 • 3

  (மற்றொருவருடைய சுகதுக்கங்களை) பகிர்ந்துகொள்ளுதல்.

  ‘பிறருடைய இன்பதுன்பங்களில் பங்குகொள்ளாமல் இருப்பது என்னால் முடியாத செயல்’