தமிழ் பங்குபோடு யின் அர்த்தம்

பங்குபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (குறிப்பிட்ட ஒன்றை ஒவ்வொருவருக்கும்) குறிப்பிட்ட அளவு என்று பிரித்தல்; பங்கிடுதல்.

    ‘சகோதரர்கள் இருவரும் சொத்தைச் சமமாகப் பங்குபோட்டுக்கொண்டனர்’
    ‘திருடிய பணத்தைப் பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது’