தமிழ் பங்கேற்பாளர் யின் அர்த்தம்

பங்கேற்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (கூட்டம், விழா, நிகழ்ச்சி முதலியவற்றில்) பங்குகொள்பவர்; கலந்துகொள்கிறவர்.

    ‘1976ஆம் ஆண்டில் இருபது பங்கேற்பாளர்களுடன் தொடங்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி தற்போது முந்நூறுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது’
    ‘மாநாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளாகப் பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன’