தமிழ் பச்சடி யின் அர்த்தம்

பச்சடி

பெயர்ச்சொல்

 • 1

  வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கித் தயிர் சேர்த்து, வேகவைக்காமல் பரிமாறப்படும் தொடுகறி.

 • 2

  மாங்காய், தக்காளி போன்றவற்றைத் துண்டுகளாக்கி இனிப்புச் சேர்த்துத் தாளித்து விருந்தில் பரிமாறப்படும் தொடுகறி.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு துவையல்.

  ‘மாங்காய்ப் பச்சடி’
  ‘இஞ்சிப் பச்சடி’
  ‘புதினாப் பச்சடி’