தமிழ் பச்சை யின் அர்த்தம்

பச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இலை, புல் போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.

தமிழ் பச்சை யின் அர்த்தம்

பச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உணவாகும் பொருள்களைக் குறித்து வரும்போது) வேகவைத்தல், சுடவைத்தல் போன்ற எந்த விதத் தயாரிப்புக்கும் உள்ளாகாத நிலை.

  ‘பாகற்காயை அவர் பச்சையாகவே சாப்பிடுவார்’
  ‘பச்சை மீனைச் சாப்பிட முடியாது’
  ‘பச்சை வேர்க்கடலை’

 • 2

  காய்ந்துபோகாமல் ஈரப்பதத்துடன் அல்லது பசுமை மாறாமல் இருக்கிற நிலை.

  ‘பச்சைக் களிமண்ணில்தான் பொம்மை செய்ய முடியும்’
  ‘பச்சை மூங்கில்’

தமிழ் பச்சை யின் அர்த்தம்

பச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒளிவுமறைவோ நயமோ இல்லாத) வெளிப்படை.

  ‘ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்கிறீர்கள் என்று அவரிடம் பச்சையாகக் கேட்டு விடப்போகிறேன்’
  ‘பச்சையாகச் சொல்வதென்றால் அவர் ஒரு சந்தர்ப்பவாதி’
  ‘‘நீ ஒரு அயோக்கியன்’ என்று பச்சையாகவே சொல்லிவிடப்போகிறேன்’

 • 2

  (பெயரடையாக வரும்போது) ‘பின்னால் குறிப்பிடப்படும் தன்மையை அல்லது நிலையை முற்றிலுமாகக் கொண்ட’ என்னும் பொருளில் பயன்படுத்தும் சொல்; சுத்தம்.

  ‘பச்சைப் பொய்’
  ‘பச்சைத் தமிழர்’
  ‘பச்சைப் புளுகு’

 • 3

  (பேச்சு, எழுத்து குறித்து வரும்போது) ஆபாசம்.

  ‘சில சந்தர்ப்பங்களில் அவன் பச்சையாகப் பேசுவான்; சகிக்க முடியாது’
  ‘இளைஞர்களைக் கெடுக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பச்சையாக எழுதுகிறார்கள்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு மோசமான.

  ‘பச்சைக் கள்ளன்’
  ‘பச்சைக் கள்ளி’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு கடுமையான தன்மை.

  ‘பச்சைப் புளிப்பு’
  ‘பச்சை உறைப்பு’