தமிழ் பசுமை யின் அர்த்தம்

பசுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தாவரங்களைக் குறிக்கும்போது) இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.

  ‘பசுமையான மேய்ச்சல் நிலங்கள்’

 • 2

  (ஒரு இடத்தில்) மரம், செடிகொடிகள் நிறைந்திருக்கும் நிலை.

  ‘நீலகிரியில் எங்கு பார்த்தாலும் பசுமை’
  ‘பசுமையான ஊர்’

 • 3

  (நினைவைக் குறிக்கும்போது) (மனத்தில்) ஆழமாகவும் நீங்காமலும் நிறைந்திருக்கும் நிலை.

  ‘என் இளமைக் கால நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன’
  ‘பசுமை நிறைந்த நினைவுகள்’