பசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பசை1பசை2

பசை1

பெயர்ச்சொல்

 • 1

  ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

  ‘இது மைதா மாவைக் கொதிக்கும் நீரில் கொட்டித் தயாரித்த பசை’
  ‘தபால் தலையின் பின்புறம் பசை தடவப்பட்டிருக்கும்’

 • 2

  (நீரின்) ஈரத் தன்மை/(எண்ணெயின்) வழுவழுப்புத் தன்மை.

  ‘நாக்கு ஈரப் பசை இல்லாமல் உலர்ந்திருந்தது’
  ‘முடியில் எண்ணெய்ப் பசையே இல்லை’
  ‘தோலில் எண்ணெய்ப் பசை இருப்பதற்கு வியர்வை உதவுகிறது’

பசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பசை1பசை2

பசை2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பண வசதி.

  ‘கையில் கொஞ்சம் பசை இருந்தால் தொழிலாவது ஆரம்பிக்கலாம்’
  ‘பசை உள்ள ஆசாமி’