தமிழ் பஞ்சம் பிழை யின் அர்த்தம்

பஞ்சம் பிழை

வினைச்சொல்பிழைக்க, பிழைத்து

  • 1

    (ஏழைகள்) சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்குப் போய்ப் பிழைப்புத் தேடுதல்.

    ‘இந்தக் கிராமத்தில் இருந்தவர்களில் பலர் பஞ்சம் பிழைக்க நகரங்களுக்குப் போய்விட்டார்கள்’
    ‘எங்களுக்கு இந்த ஊர் இல்லை. என் பாட்டனார் பஞ்சம் பிழைக்க இந்த ஊருக்கு வந்தார்’