தமிழ் பட்டம் யின் அர்த்தம்

பட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து உயர்நிலைக் கல்வித் தகுதி பெற்றதை உறுதிசெய்யும் வகையில் ஒருவருக்கு வழங்கப்படும் சான்றிதழ்.

  ‘முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்’
  ‘முதுகலைப் பட்டம் பெற்றவர்’

 • 2

  (விளையாட்டுப் போட்டியில்) வென்று முதன்மை நிலையை அடைந்தவருக்கு வழங்கப்படுவது.

  ‘ஒரே ஆண்டில் ஐந்து பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர்’

 • 3

  (திருமணத்தில்) தாய்மாமன், நாத்தனார் முறையில் உள்ளவர்கள் மணமகளுக்கு அல்லது மணமகனுக்கு நெற்றியில் கட்டும் பொன் தகடு அல்லது காசு.

  ‘மணமகளுக்கு முதலில் தாய்மாமன் பட்டம் கட்டினார்’

 • 4

  (அரசர் வகிக்கும்) ஆட்சிப் பொறுப்பு; (மடாதிபதி வகிக்கும்) அதிகாரப் பொறுப்பு.

  ‘பட்டத்திற்கு வந்த சில நாட்களிலேயே அரசர் இறந்துவிட்டார்’

தமிழ் பட்டம் யின் அர்த்தம்

பட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (காற்றில் பறக்க விட்டு விளையாடும்) காற்றாடி.

  ‘மைதானத்தில் சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தனர்’

தமிழ் பட்டம் யின் அர்த்தம்

பட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  பயிரிடுவதற்கான பருவம்; சாகுபடி.

  ‘நவரைப் பட்டம்’