தமிழ் பட்டம் கட்டு யின் அர்த்தம்

பட்டம் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

 • 1

  (ஒருவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில்) அவப்பெயர் உண்டாக்குதல்.

  ‘நீ இப்படியே காசை வாரி இறைத்துக்கொண்டிருந்தால் உனக்குப் பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிடுவார்கள்’
  ‘எனக்கும் இந்தத் திருட்டுக்கும் சம்பந்தமே இல்லை. எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டாதீர்கள் என்று அழுதான்’

தமிழ் பட்டம் கட்டு யின் அர்த்தம்

பட்டம் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (தோடு, மோதிரம் போன்ற நகைகளில்) கல் வைத்துப் பதித்தல்.

  ‘மோதிரத்துக்கு வடிவாக நவரத்தினங்களால் பட்டம் கட்டித்தா’