தமிழ் பட்டாணி யின் அர்த்தம்

பட்டாணி

பெயர்ச்சொல்

 • 1

  (காய்கறியாகப் பயன்படும்) சற்றுப் பெரிய பச்சை நிறப் பயறு வகை/மேற்குறிப்பிட்ட பயறு காய்க்கும் கொடி.

  ‘பட்டாணிக் குருமா’
  ‘பட்டாணிக் கொடி இன்னும் காய்க்க ஆரம்பிக்கவில்லை’

 • 2

  காயவைத்து உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுக்கப்பட்ட முன் குறிப்பிடப்பட்ட பயறு.

  ‘ஒரு ரூபாய்க்குப் பட்டாணி வாங்கிக் கொறித்துக்கொண்டே நடந்தான்’