தமிழ் பட்டிக்காடு யின் அர்த்தம்

பட்டிக்காடு

பெயர்ச்சொல்

  • 1

    நகரத்து வசதிகள் சிறிதளவு கூட இல்லாத கிராமம்; குக்கிராமம்.

    ‘இந்தப் பட்டிக்காட்டிலிருந்துகொண்டே படித்துப் பட்டம் பெற்றவள் இவள்’

  • 2

    நகரத்து வாழ்க்கை, நாகரிகம் பற்றிச் சிறிதளவுகூட அறியாத நபர்.

    ‘அவன் சுத்தப் பட்டிக்காடு; கால்சட்டை போடமாட்டானாம்’