தமிழ் பட்டு யின் அர்த்தம்

பட்டு

பெயர்ச்சொல்

 • 1

  புழுவாக இருக்கும் பருவத்தில் உள்ள ஒரு வகைப் பூச்சியிலிருந்து சுரக்கும் திரவத்தால் உருவாகும் கூட்டிலிருந்து எடுக்கப்படுவதும் நூலாக ஆக்கி ஆடைகள் நெய்யப் பயன்படுவதுமான மெல்லிய இழை.

  ‘பட்டு நூல்’
  ‘பட்டு வேட்டி’
  ‘பட்டுப் புடவை’

 • 2

  பட்டு நூலால் நெய்யப்பட்ட புடவை.

  ‘அரக்கு நிறப் பட்டு உனக்கு எடுப்பாக இருக்கிறது’
  ‘தீபாவளிக்குக் காஞ்சிபுரம் பட்டு எடுக்கலாம்’