தமிழ் பட்டுக்கொள் யின் அர்த்தம்

பட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) (குறிப்பிட்ட விஷயங்களில்) சம்பந்தப்படுதல் அல்லது ஈடுபடுத்திக்கொள்ளுதல்; (குறிப்பிட்ட விஷயங்களை) கண்டுகொள்ளுதல்.

    ‘எதிலும் பட்டுக்கொள்ளாமல் பேசாதே’
    ‘அலுவலக விஷயங்கள் எதிலும் நான் பட்டுக்கொள்வதே இல்லை’