தமிழ் பட்டும்படாமலும் யின் அர்த்தம்

பட்டும்படாமலும்

வினையடை

  • 1

    (பேசுதல், நடந்துகொள்ளுதல் குறித்து வரும்போது) (எந்த ஒரு விஷயத்திலும்) முழுமையாக ஈடுபடாமலும் விலகிவிடாமலும்.

    ‘சிபாரிசு செய்கிறேன் என்றும் சொல்லவில்லை, செய்யமாட்டேன் என்றும் சொல்லவில்லை; பட்டும்படாமலும் பேசுகிறார்’
    ‘தம்பியின் திருமணத்திற்கு வந்தவர் பட்டும்படாமலும் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்’