தமிழ் பட்டை யின் அர்த்தம்

பட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சற்று அகலமான கோடு அல்லது அது போன்று பூசப்பட்டது அல்லது வரையப்பட்டது; (கம்பி அல்லது கம்பி போன்றவற்றைக் குறிக்கும்போது) சற்றுத் தட்டையானது.

  ‘பறவையின் இறக்கையில் ஒரு கறுப்புப் பட்டை இருந்தது’
  ‘நெற்றியில் பட்டையாக விபூதி பூசியிருந்தார்’
  ‘பட்டையான வளையல்’

 • 2

  (தோல், துணி, உலோகம் போன்றவற்றில்) அகலமாகவோ நீளமாகவோ இருக்கும் துண்டு.

  ‘நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வங்கி ஊழியர்கள் சட்டையில் கறுப்புப் பட்டை குத்தியிருந்தார்கள்’
  ‘கதவின் உடைந்த பகுதியில் இரும்புப் பட்டை அடித்திருந்தார்கள்’

 • 3

  (உரித்தெடுக்கக்கூடிய) மரத் தோல்.

  ‘மரங்கள் பட்டை உரிக்கப்பட்டுக் காணப்பட்டன’
  ‘வாழைப் பட்டையைக் காய வைத்துப் பொடிமட்டை தயாரிப்பார்கள்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு பனை ஓலையால் நெருக்கமாகப் பின்னித் தயாரிக்கப்பட்ட கூடை.

தமிழ் பட்டை யின் அர்த்தம்

பட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு