தமிழ் படபட யின் அர்த்தம்

படபட

வினைச்சொல்படபடக்க, படபடத்து

 • 1

  (இமைகள், சிறகுகள் முதலியவை) வேகமாக அடித்துக்கொள்ளுதல்/(இதயம்) வேகமாகத் துடித்தல்.

  ‘இறக்கைகள் படபடக்க ஒரு புறா கிளையில் வந்து அமர்ந்தது’
  ‘பயத்தில் சிறுமியின் இமைகள் படபடத்தன’
  ‘பணத்தைக் காணோம் என்றதும் நெஞ்சம் படபடக்க வீடு முழுவதும் தேடினான்’

 • 2

  (பேச்சு, நடந்துகொள்ளும் விதம் குறித்து வரும்போது) அவசரப்படுதல்; விரைதல்.

  ‘ஏன் இப்படிப் படபடக்கிறாய்? நிதானமாக விஷயத்தைச் சொல்’