தமிழ் படபடப்பு யின் அர்த்தம்

படபடப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பழக்கம் இல்லாத சூழல், கோபம், கவலை போன்றவற்றால் (இதயத்திலும் கைகால்களிலும்) இயல்பான நிலையில் இருக்க முடியாத அளவுக்கு ஏற்படும் துடிப்பு.

  ‘தந்தியில் இருப்பது நல்ல செய்திதான் என்று அறிந்ததும் படபடப்பு அடங்கிற்று’
  ‘நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்குள் நுழையும் முன் படபடப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பாக இருக்க முயற்சித்தான்’

 • 2

  (பேச்சு, நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றில்) அவசரம்; விரைவு.

  ‘படபடப்பாகப் பேசாமல், அமைதியாகச் செய்தியைச் சொல்’