தமிழ் பீடம் யின் அர்த்தம்

பீடம்

பெயர்ச்சொல்

 • 1

  (சிலை போன்றவை வைப்பதற்கு ஏற்ற வகையில் அல்லது பலி கொடுப்பதற்கு ஏற்ற வகையில்) கல்லால் எழுப்பப்பட்ட உயர் மேடை.

  ‘பீடத்தைக் கழுவி மலர் வைத்தார்’

 • 2

  (அரசர், நீதிபதி போன்றோர் அமர்வதற்கு ஏற்ற) அகன்ற மேடை.

 • 3

  உயர் வழக்கு (ஆட்சி, அதிகாரம் போன்றவற்றில்) உயர்ந்த நிலை அல்லது பொறுப்பு.

  ‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் அமர்வோம்!’
  ‘நாட்டின் உயர்ந்த அதிகாரப் பீடத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த பொறுப்பு உண்டு’
  ‘பௌத்த மதத் தலைமைப் பீடம்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (பல்கலைக்கழகத்தில்) புலம்; துறை.

  ‘விஞ்ஞான பீடம்’

தமிழ் படம் யின் அர்த்தம்

படம்

பெயர்ச்சொல்

 • 1

  வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.

  ‘இது யார் வரைந்த படம்?’
  ‘பூஜையறையில் நிறைய சாமி படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன’
  ‘நீ எடுத்த படம் நன்றாக இருக்கிறது’

 • 2

 • 3

  ஓர் இடத்தின் எல்லை, அமைப்பு முதலியவற்றைக் குறித்துக் காட்டுகிற வகையில் வரையப்பட்டது; வரைபடம்.

  ‘படத்தில் இந்தியாவின் தலைநகரைக் குறி’

தமிழ் படம் யின் அர்த்தம்

படம்

பெயர்ச்சொல்

 • 1

  (நல்லபாம்பு சீறும்போது) விரிந்திருக்கும் கழுத்துப் பகுதி.