தமிழ் படம் எடு யின் அர்த்தம்

படம் எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

 • 1

  புகைப்படம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி போன்றவற்றுக்காகக் காட்சிகளை, நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்தல்.

  ‘அற்புதமான காட்சி! கேமரா இருந்திருந்தால் படம் எடுத்திருப்பேன்’
  ‘அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிக்காகப் படம் எடுக்கப்பட்டது’

 • 2

  திரைப்படம் தயாரித்தல்.

  ‘அவர் தனியாகப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்’

தமிழ் படம் எடு யின் அர்த்தம்

படம் எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

 • 1

  (நல்லபாம்பு சீறும்போது) தலையை உயர்த்தி கழுத்தை அகலமாக விரித்தல்.

  ‘நல்லபாம்பு படம் எடுத்ததைப் பார்த்ததும் பயந்து ஓடினான்’