தமிழ் படர் யின் அர்த்தம்

படர்

வினைச்சொல்படர, படர்ந்து

 • 1

  (செடி, கொடி முதலியவை ஒரு பரப்பில்) கிளைத்துப் பரவுதல் அல்லது விரிதல்.

  ‘சுரைக் கொடி கூரை முழுவதும் படர்ந்திருந்தது’
  ‘ஆலமரக் கிளைகள் படர்ந்து விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தன’

 • 2

  (ஒளி, நிழல் போன்றவை ஒரு பரப்பில்) பட்டுப் பரவுதல்.

  ‘சூரிய ஒளி அறைக்குள் படர ஆரம்பித்தது’
  ‘சாலையில் மர நிழல் படர்ந்திருந்தது’
  உரு வழக்கு ‘அவள் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது’

 • 3

  (தோலில் தேமல்) பரவுதல்.

  ‘முகமெல்லாம் அவனுக்குத் தேமல் படர்ந்திருந்தது’