தமிழ் படல் யின் அர்த்தம்

படல்

பெயர்ச்சொல்

 • 1

  மூங்கில் முள்ளைக் குத்துவாக்கில் நெருக்கமாகப் பரப்பிக் கட்டி வேலியாகப் பயன்படுத்தும் தடுப்பு.

  ‘திண்ணையைப் படல் வைத்து அடைத்திருந்தார்’
  ‘மூங்கில் படலின் மீது ஈர வேட்டியைக் காயப்போட்டார்’
  ‘படலுக்கு வெளியிலிருந்து யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது’
  ‘வேலி போட எத்தனை படல் வேண்டும்?’

 • 2

  (வேலியின்) திறப்பைத் திறந்து மூட உதவும் தட்டி; தட்டிக் கதவு.

  ‘படலைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்’