தமிழ் படலம் யின் அர்த்தம்

படலம்

பெயர்ச்சொல்

 • 1

  (புகை, புழுதி முதலியவை பொருள்களை மறைக்கும் அளவுக்கு) பரந்து அல்லது அடர்ந்து காணப்படும் நிலை.

  ‘குதிரைகள் ஓடியதால் புழுதிப் படலம் எழுந்தது’
  ‘மலைச் சிகரத்தைப் பனிப் படலம் மூடியிருக்கிறது’

 • 2

  காற்று மண்டலத்தில் அடுக்குபோல் படர்ந்திருப்பது; -.

  ‘அயனிப் படலம்’
  ‘ஓசோன் படலம் பூமிக்குப் பாதுகாப்பு அளிக்கிறது’

 • 3

  சவ்வு போன்ற மெல்லிய சதை.

  ‘விழி வெண்படலம்’
  ‘கண்ணில் வளர்ந்திருந்த சதைப் படலம் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டது’
  ‘இதய உறையின் சுவர் இரண்டு லேசான படலங்களால் ஆனது’

தமிழ் படலம் யின் அர்த்தம்

படலம்

பெயர்ச்சொல்

 • 1

  (காவியம், இதிகாசம் போன்றவற்றின்) உட்பிரிவு.

  ‘ராமாயணத்தில் ராமன் நகர் நீங்கும் படலம்’

 • 2

  (குறிப்பிட்ட நோக்கத்தை) நிறைவேற்றுவதற்கான முயற்சி தொடரும் காலமும் அதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும்.

  ‘வேலையில் சேர்ந்தவுடன் பையனுக்குப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிடும்’
  ‘வீடு தேடும் படலம் இன்னும் முடியவில்லையா?’

தமிழ் படலம் யின் அர்த்தம்

படலம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பட்டத்தின் வடிவத்தைக் குறிக்கும்போது) சதுரம்.

  ‘மற்ற கொடிகளைவிடப் படலக் கொடி கட்டுவது சுலபம்’