படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

படி1

வினைச்சொல்படிய, படிந்து, படிக்க, படித்து

 • 1

  (பனி, ஈரம் அல்லது தூசு போன்றவை ஒரு பரப்பின் மீது) மூடியோ பரவியோ காணப்படுதல்.

  ‘பனி படிந்த மலைத்தொடர்கள்’
  ‘இரத்தக் கறை படிந்த வேட்டி கைப்பற்றப்பட்டது’
  ‘ஆடை படிந்திருக்கும் பால் எனக்கு வேண்டாம்’

 • 2

  (ஒன்றின் மீது) அழுந்தி அமைதல்.

  ‘எண்ணெய் தடவித் தலையைப் படிய வாரியிருந்தான்’
  ‘கனமான புத்தகங்களை வைத்தால் தாள் படிந்துவிடும்’

 • 3

  (குறிப்பிட்ட தன்மை ஒருவரிடம் அல்லது ஒன்றிடம்) இயல்பாகவே அமைந்துவிடுதல்.

  ‘தந்தையின் குணம் அவனிடம் அப்படியே படிந்திருந்தது’
  ‘கதை உத்திகள் அவரிடம் படிந்துபோன விஷயம்’

 • 4

  பணிதல்; கட்டுப்படுதல்.

  ‘இவன் படிந்து வேலை செய்வான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’

 • 5

  (விலை) ஒத்துவருதல்.

  ‘விலை படிந்தால்தான் வாங்குவேன்’
  ‘பேரம் படியவில்லை’

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

பீடி2

வினைச்சொல்பீடிக்க, பீடித்து

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரை நோய், மோசமான நிலை போன்றவை) பாதித்தல்; ஆட்படுத்துதல்.

  ‘புற்றுநோயால் பீடிக்கப்பட்டார்’
  ‘இந்த நோய் அதிக அளவில் குழந்தைகளையே பீடிக்கிறது’
  ‘நாடு வறட்சியால் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆடம்பரச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்’

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

படி3

வினைச்சொல்படிய, படிந்து, படிக்க, படித்து

 • 1

  எழுதப்பட்டிருப்பதை உச்சரித்தல்; வார்த்தைகளாக்கிப் பொருளை உணர்தல்; வாசித்தல்.

  ‘பத்திரிகையின் பெயரை உரக்கப் படித்துவிட்டு, ‘கசடதபற என்று ஒரு பெயரா?’ என்று முகம் சுளித்தார்’
  ‘கடிதத்தைப் பிரித்து உரக்கப் படித்தார்’
  ‘நூலகத்தில் அமைதியாகப் படிக்க வேண்டும்’
  ‘இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை’

 • 2

  (பள்ளி முதலியவற்றில்) கல்வி கற்றல்.

  ‘என் பையன் பள்ளிக்கூடத்தில் ஆறாவது படிக்கிறான்’
  ‘இது நான் படித்த கல்லூரி’

 • 3

  பேச்சு வழக்கு (ஒன்றில்) தேர்ச்சி பெறுகிற அளவு பயிலுதல்; பழகுதல்.

  ‘என் மகள் ஒரு மாதமாகத் தையல் படிக்கிறாள்’
  ‘சின்ன வயதிலேயே சைக்கிள் படிக்காவிட்டால் பிறகு கற்றுக்கொள்வது சிரமம்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (அனுபவத்திலிருந்து) கற்றுக்கொள்ளுதல்; படிப்பினையைப் பெறுதல்.

  ‘நான் உங்களுடன் வேலை செய்வதிலிருந்து பலவற்றைப் படித்துக்கொண்டேன்’
  ‘வியாபாரம் செய்த காலத்தில் நான் படித்ததுதான் இன்று சமூகத்தில் வாழ உதவுகிறது’

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

பீடி4

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு வகைக் காய்ந்த இலையில் பதப்படுத்தப்பட்ட புகையிலைத் தூள் வைத்துச் சுருட்டிய, புகைப்பதற்கான பொருள்.

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

படி5

பெயர்ச்சொல்

 • 1

  (கீழிருந்து மேலே செல்வதற்காக) சம உயரத்துடனும் நீள அகலங்களுடனும் ஏறுவரிசையில் சாய்வான கோணத்தில் (ஒன்றின் மேல் ஒன்றாகச் செவ்வக வடிவில் கட்டைகள் போன்று) கட்டப்படும் அமைப்பு/(அந்த அமைப்பில் அல்லது ஏணியில்) கால் வைப்பதற்கு உரிய கட்டை.

  ‘மாலை நேரமானால் படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பாள்’
  ‘மாடிப் படியில் ஓடி விளையாடாதே’
  ‘ஏணிப் படிகள் உடைந்திருக்கின்றன’

 • 2

  (வாழ்க்கை அல்லது வளர்ச்சி, திட்டம் போன்று தொடர்ந்து நிகழ்பவற்றில்) ஒரு நிலை; கட்டம்.

  ‘வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் கஷ்டப்பட்டு முன்னேறியவன்’
  ‘இந்தத் திட்டத்தின் முதல் படி, அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவது’

 • 3

  (‘ஒரு’ என்பதோடு இணைந்து) (தகுதி, தரம் ஆகியவற்றில்) நிலை.

  ‘படிப்பிலும் அறிவிலும் உன்னைவிட அவர் ஒரு படி மேல்தான்’

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

படி6

பெயர்ச்சொல்

 • 1

  (முகத்தலளவையில்) எட்டு ஆழாக்கு (1.6 கிலோ) கொண்ட ஓர் அளவு/மேற்குறிப்பிட்ட அளவு குறிக்கப்பட்ட கொள்கலன்.

  ‘அரிசியை அளக்க வேண்டும்; படியைக் கொண்டுவா’

 • 2

  கணிதம்
  அடுக்கு.

  ‘5²+4³= 89 என்ற கணக்கில் 5இன் படி 2 ஆகும்’

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

படி

பெயர்ச்சொல்

 • 1

  பணியாளர்களுக்குப் பயணச் செலவு, வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு முதலிய செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அடிப்படைச் சம்பளத்தோடு குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை.

  ‘தினப் படி’
  ‘அகவிலைப் படி’
  ‘பயணப் படி’

படி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படி1படி2படி3படி4படி5படி6

படி

பெயர்ச்சொல்

 • 1

  (புத்தகத்தின்) அச்சடிக்கப்பட்ட பிரதி; (தட்டச்சு முதலியன செய்வதில்) நகல்.

  ‘இந்தப் புத்தகத்தின் ஐநூறு படிகளும் விற்றுவிட்டன’
  ‘இதை நான்கு படிகளாகத் தட்டச்சு செய்துகொடுங்கள்’
  ‘கல்வெட்டுகளைப் படி எடுப்பது சற்றுச் சிரமமான வேலைதான்’