தமிழ் படிப்பினை யின் அர்த்தம்

படிப்பினை

பெயர்ச்சொல்

  • 1

    (வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவற்றிலிருந்து ஒருவர்) எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக் கூடாது என்று கற்றுக்கொள்வது; பாடம்.

    ‘தேர்தல் தோல்வி நம் கட்சிக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தந்திருக்கும்’
    ‘சர்வாதிகாரம் நிலைத்ததே இல்லை என்பது வரலாறு காட்டும் படிப்பினை’