தமிழ் படிப்பு யின் அர்த்தம்

படிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பெறும்) கல்வி.

  ‘இளம் வயதில் படிப்பில் கவனம் செல்லவில்லை என்றால் என்ன செய்வது?’
  ‘படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி என் மகள் எப்போதும் முதலாவதாகத்தான் வருவாள்’

 • 2

  குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் பயிற்றுவிக்கும் துறை.

  ‘விலங்குகளைப் பற்றிய படிப்பு விலங்கியல் ஆகும்’
  ‘பொறியியல் படிப்பு’