தமிழ் படிமம் யின் அர்த்தம்

படிமம்

பெயர்ச்சொல்

 • 1

  விக்கிரகம்.

  ‘கோயிலின் இந்தச் செப்புப் படிமம் மிகப் பழமையானது’

 • 2

  (கவிதை, கதை அல்லது திரைப்படம் முதலியவற்றில்) குறிப்பிட்ட உணர்வு, காட்சி, நிலை போன்றவற்றை மனத்தில் எழுப்பக்கூடிய விதத்தில் சொல், தொடர் அல்லது காட்சிகளைப் பயன்படுத்தும் முறை/மேற்குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தப்படும் சொல், தொடர், காட்சி போன்றவை.

  ‘‘வெந்து தணிந்தது காடு’ என்ற படிமத்தின் மூலம் ஒரு பெரிய அக எழுச்சியை நம்மில் ஏற்படுத்திவிடுகிறார் பாரதியார்’
  ‘‘காற்றின் தீராத பக்கங்களில்’ என்ற படிமத்தில் வாழ்வின் விரிவை எவ்வளவு அழகாகக் கவிஞர் பிரமிள் சொல்லிவிடுகிறார் பாருங்கள்!’

 • 3

  ஒருவரைப் பற்றிப் பிறர் கொள்ளும் அல்லது ஒருவர் தன்னைப் பற்றிப் பிறரிடம் ஏற்படுத்தும் எண்ணம் அல்லது தோரணை.

  ‘தான் ஒரு பெரிய சிந்தனைவாதி என்ற படிமத்தை இந்த நூலின் மூலம் உருவாக்க அவர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்’
  ‘அவருடைய சமீபத்திய செயல்பாடுகள் அவர் ஒரு மோசமான அரசியல்வாதி என்ற படிமத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது’