தமிழ் படியள யின் அர்த்தம்

படியள

வினைச்சொல்-அளக்க, -அளந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிழைப்புக்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குத் தேவையானவற்றை அளித்தல்.

    ‘இந்தத் துண்டு நிலம்தான் எனக்குப் படியளக்கிறது’
    ‘நீ எனக்குப் படியளப்பதைப் போல் அல்லவா பேசுகிறாய்?’
    ‘உன் படிப்புக்குப் படியளப்பதே நான்தான் என்பது உன் நினைவில் இருக்கட்டும்’