தமிழ் படிவம் யின் அர்த்தம்

படிவம்

பெயர்ச்சொல்

 • 1

  (தகவல்களை வகைப்படுத்திப் பெறுவதற்காக) கேள்விகள் அல்லது வாசகங்கள் அடங்கியதும் அவற்றை நிரப்புவதற்கான இடங்களும் உள்ள தாள்.

  ‘இந்த வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை நூறு ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்’
  ‘பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்பிவிட வேண்டும்’

தமிழ் படிவம் யின் அர்த்தம்

படிவம்

பெயர்ச்சொல்

 • 1

  நிலத்தடியிலோ பாறைகளிலோ படிந்து காணப்படும் உலோகங்களின் அல்லது தாதுக்களின் அடுக்கு.

  ‘இந்தியாவில் ஒருசில இடங்களிலேயே செப்புப் படிவங்கள் இருக்கின்றன’