படு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படு1படு2படு3படு4படு5படு6

படு1

வினைச்சொல்பட, பட்டு, படுக்க, படுத்து

 • 1

  (ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கும் விதத்தில் இருத்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 ஒரு பரப்பின் மீது வந்து அமைதல் அல்லது விழுதல்

   ‘சூரிய வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது’
   ‘கொதிக்கும் எண்ணெய் பட்ட இடம் கொப்பளித்துவிட்டது’
   ‘தெரியாமல் கை பட்டதற்கு ஏன் கோபித்துக்கொள்கிறாய்?’
   உரு வழக்கு ‘அவளுடைய பார்வை தன் மேல் பட்டதை உணர்ந்தான்’

  2. 1.2 (ஒன்றின் மீது) விசையுடன் விழுதல் அல்லது பதிதல்

   ‘கல் பட்டுக் கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது’
   ‘பல் பட்ட இடத்தில் இரத்தம் வந்தது’
   ‘ஜாக்கிரதை! கத்தி பட்டுவிடப்போகிறது’

  3. 1.3 (ஒன்றில்) சிக்குதல்

   ‘வேட்டி முள்ளில் பட்டுக் கிழிந்துவிட்டது’

 • 2

  (உண்டாதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (குறிப்பிட்ட எண்ணம்) உண்டாதல் அல்லது (மனத்தில்) தோன்றுதல்

   ‘உனக்கு எது முக்கியம் என்று படுகிறதோ அதைச் செய்’
   ‘என் மனத்தில் பட்டதைச் சொன்னேன்’
   ‘ஊரிலிருந்து எப்படியும் இன்று அப்பா வந்துவிடுவார் என்று எனக்குப் படுகிறது’
   ‘நீ சொல்வது சரி என்று எனக்குப் படவில்லை’

  2. 2.2 தெரியவருதல்

   ‘என் கண்ணில் யாரும் படவில்லை’
   ‘நான் கூட்டத்துக்குப் போனபோது அவர் என் கண்ணில் பட்டார்’
   ‘என் காதில் பட்டதை உன்னிடம் சொல்லிவிட்டேன்’

  3. 2.3 (துன்பம், சிரமம் போன்றவற்றுக்கு) உள்ளாதல்; அனுபவித்தல்

   ‘என் மகனைப் படிக்க வைக்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல’
   ‘படாத பாடு பட்டு, நான் சேர்த்த பணம் இது’

படு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படு1படு2படு3படு4படு5படு6

படு2

துணை வினைபட, பட்டு, படுக்க, படுத்து

 • 1

  பெயர்ச்சொற்களோடும் வினையடிகளோடும் வினையெச்சங்களோடும் இணைந்து ‘கொள்ளுதல்’, ‘அனுபவித்தல்’ போன்ற பொருளில் அல்லது குறிப்பிட்ட செயல் முழுமை பெற்றிருப்பதைக் காட்டும் பொருளில் அவற்றை வினைப்படுத்தும் வினை.

  ‘துன்பப்படு’
  ‘பெருமைப்படு’
  ‘கர்வப்படு’
  ‘கோபப்படு’
  ‘பொறாமைப்படு’
  ‘உடைபடு’
  ‘வகுபடு’
  ‘மிதிபடு’
  ‘புரிபடு’

 • 2

  ‘ செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் செயப்பாட்டு வினையின் தன்மையை உணர்த்தும் துணை வினை.

  ‘விஷச் செடிகள் அழிக்கப்பட வேண்டும்’
  ‘கடைசி நாள் நடந்த போரில் துரியோதனன் கொல்லப்பட்டான்’

 • 3

  உயர் வழக்கு பெரும்பாலும் ‘அழிதல்’ என்னும் பொருளைக் குறிக்கும் செயப்படுபொருள் குன்றிய வினைகளுடன் இணைந்து குறிப்பிட்ட செயல் முழுமை பெற்றிருப்பதைக் காட்டும் ஒரு துணை வினை.

  ‘அழிந்து பட்ட நாகரிகத்தின் எஞ்சிய சின்னங்கள்’
  ‘போரில் இறந்துபட்டவர்களுக்காகக் கட்டிய ஸ்தூபி’

 • 4

  வட்டார வழக்கு (எதிர்மறை வடிவத்தில்) ‘கூடாது’ என்னும் பொருளில் பயன்படுத்தும் துணை வினை.

  ‘யாரும் அவனைப் பற்றித் தப்பாகப் பேசப்படாது’

படு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படு1படு2படு3படு4படு5படு6

படு3

வினைச்சொல்பட, பட்டு, படுக்க, படுத்து

 • 1

  (தாவரங்கள்) வளர்ச்சி நிலை குறைந்து காய்ந்துபோதல்; வறண்டு உலர்ந்துபோதல்.

  ‘செடி பட்டுப்போயிற்று’

படு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படு1படு2படு3படு4படு5படு6

படு4

வினைச்சொல்பட, பட்டு, படுக்க, படுத்து

 • 1

  தூங்குவதற்காக அல்லது ஓய்வுக்காக உடலை ஒரு பரப்பின் மீது கிடத்துதல்.

  ‘ஏன் தரையில் படுத்திருக்கிறாய்?’
  ‘தெருவில் எருமை மாடுகள் படுத்துக்கிடந்தன’
  ‘யானை படுத்து நான் பார்த்ததில்லை’
  ‘அப்பா மதிய வேளையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம்’
  ‘அவள் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கச் சென்றாள்’
  ‘வழக்கமாக எப்போது நீ படுப்பாய்?’

 • 2

  (ஒரு பொருளை) கிடைமட்டத்தில் வைத்தல்.

  ‘பலகையைத் தரையில் படுக்கப்போடு’
  ‘ஏணியை சுவர் ஓரமாகப் படுக்க வை’

 • 3

  பேச்சு வழக்கு (ஒரு தொழில், திரைப்படம் முதலியவை) லாபகரமாக நடைபெற முடியாமல் போதல்.

  ‘வெளியாகிய முதல் வாரத்திலேயே திரைப்படம் படுத்துவிட்டது’
  ‘பறவைக் காய்ச்சல் பயம் காரணமாகக் கோழி வியாபாரம் படுத்துவிட்டது’

படு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படு1படு2படு3படு4படு5படு6

படு5

பெயரடை

 • 1

  (குறிப்பிடப்படும்) தன்மையின் மிகுதியைக் காட்ட அல்லது தன்மையை வலியுறுத்திக் கூறப் பயன்படும் பெயரடை.

  ‘அவன் படு கில்லாடி’
  ‘அவர் படு கோழை’

 • 2

  (கொலை, காயம் அல்லது தோல்வி முதலியவற்றைக் குறிக்கும்போது) மிக மோசமான.

  ‘பட்டப்பகலில் படு கொலை’
  ‘விபத்தில் படு காயம்’
  ‘முதல் சுற்றிலேயே படு தோல்வி’

படு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படு1படு2படு3படு4படு5படு6

படு6

இடைச்சொல்

 • 1

  ‘மிகவும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவன் படு வேகமாக ஓடிவந்தான்’
  ‘படு மோசமான திரைப்படம்’