தமிழ் படுக்கை யின் அர்த்தம்

படுக்கை

பெயர்ச்சொல்

 • 1

  படுத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாய், மெத்தை போன்ற விரிப்பு/(மருத்துவமனையில்) கட்டில்.

  ‘எழுந்ததும் படுக்கையைச் சுருட்டி வை’
  ‘நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனை’

 • 2

  தூங்குவதற்காகப் படுத்தல்.

  ‘தாத்தாவுக்குப் படுக்கையெல்லாம் திண்ணையில்தான்’
  ‘இன்று இரவு மாமா வீட்டில்தான் எனக்குப் படுக்கை’

 • 3

  நடமாட முடியாத படுத்த நிலை.

  ‘செய்யாத வைத்தியம் இல்லை; இரண்டு மாதமாகப் படுக்கைதான்’

 • 4

  (பெரும்பாலும் ஒரு பொருள் இருக்கும் நிலையைக் குறிக்கும் சொற்களோடு இணைந்து) கிடை மட்டம்.

  ‘பாறையில் படுக்கை நிலையில் ஒரு வேல் பொறிக்கப்பட்டிருந்தது’