தமிழ் படுக்கையில் விழு யின் அர்த்தம்

படுக்கையில் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

 • 1

  (மிதமிஞ்சிய களைப்பால்) தூங்கச் செல்லுதல்.

  ‘இரண்டு நாளாகச் சரியான தூக்கம் இல்லை. இப்பொழுது படுக்கையில் விழுந்தால் காலை பத்து மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று நினைக்கிறேன்’

 • 2

  (நோய், முதுமை முதலியவற்றால்) நடமாட முடியாத நிலைக்கு ஆளாகுதல்.

  ‘தன் மனைவி பிரிந்த கவலையிலேயே அவர் படுக்கையில் விழுந்துவிட்டார்’
  ‘விபத்தினால் படுக்கையில் விழுந்தவர், அதிலிருந்து மீளவே இல்லை’