படை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படை1படை2படை3படை4

பீடை1

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு துன்பம் மிகுந்த நிலை.

  ‘உன்னைப் பிடித்திருந்த பீடை ஒழிந்தது’

 • 2

  சோதிடம்
  பேச்சு வழக்கு கிரகத்தின் பாதிப்பால் ஏற்படும் தீமை.

படை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படை1படை2படை3படை4

படை2

வினைச்சொல்படைக்க, படைத்து

 • 1

  (புதிதாக அல்லது புதிய முறையில் ஒன்றை) உருவாக்குதல்; உண்டாக்குதல்.

  ‘புதிய சமுதாயத்தைப் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’

 • 2

  (கலைப் படைப்பு, கதைப் பாத்திரம் முதலியவற்றை) உருவாக்குதல்; உண்டாக்குதல்.

  ‘தி. ஜானகிராமன் படைத்த கதைப்பாத்திரங்கள் தஞ்சாவூர்க் கலாச்சாரத்தை வெகு சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன’

 • 3

  (புதிய சாதனை அல்லது வரலாறு) ஏற்படுத்துதல்.

  ‘நூறு மீட்டர் தூரத்தைப் பத்து வினாடிக்குள் கடந்து சாதனை படைத்தார்’
  ‘தமிழ்த் திரைப்பட உலகில் வரலாறு படைத்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன்’

படை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படை1படை2படை3படை4

படை3

வினைச்சொல்படைக்க, படைத்து

 • 1

  (கடவுளுக்கு உணவு முதலியவை) நிவேதனமாக அளித்தல்.

  ‘சாமிக்குப் படைத்த பிறகுதான் நாம் சாப்பிட வேண்டும்’

 • 2

  (விருந்து) தருதல்.

  ‘அவர் ஆயிரம் பேருக்கு விருந்து படைத்தார்’

படை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படை1படை2படை3படை4

படை4

பெயர்ச்சொல்

 • 1

  (நாட்டைக் காக்க ஆயுதங்களின் உதவியால்) போரிடுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்களின் தொகுதி.

  ‘போர் விமானங்களின் உதவியுடன் இந்தியப் படை வேகமாக முன்னேறியது’
  ‘‘அமெரிக்கா தன் படை வலிமையை உலகுக்குக் காட்ட நடத்திய போர்தான் இது’ என்றார் அவர்’
  ‘இராசேந்திர சோழன் தன் படை பலத்தால் பல நாடுகளை வென்றான்’

 • 2

  (குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) பயிற்சி பெற்ற வீரர்களின் அல்லது நபர்களின் தொகுதி.

  ‘போலீஸ் படை’
  ‘தொண்டர் படை’

படை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

படை1படை2படை3படை4

படை

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு வகைப் பூஞ்சையினால் ஏற்படும், அரிப்பையும் சொரசொரப்பான புண்ணையும் உண்டாக்கக்கூடிய தோல் நோய்.