தமிழ் படையெடு யின் அர்த்தம்

படையெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

 • 1

  (நாட்டை, நகரத்தை) கைப்பற்றப் படையுடன் நுழைதல்.

  ‘அலெக்சாந்தர் இந்தியாமீது படையெடுத்தார்’

 • 2

  (ஓர் இடத்திற்கு) பெரும் கூட்டமாகச் செல்லுதல்.

  ‘அட்சய திருதியையை முன்னிட்டு மக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தனர்’
  ‘புதிதாகத் திறந்திருக்கும் ஜவுளிக் கடைக்கு மக்கள் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்’
  ‘விளைந்திருக்கும் பயிர்களின் மீது வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன’

 • 3

  (குறிப்பிட்ட நோக்கத்திற்காக) ஒரு இடத்திற்குப் பல முறை சென்று வருதல்.

  ‘வங்கிக்குப் படையெடுத்து என்ன பிரயோஜனம்? இன்னும் கேட்ட கடன் கிடைக்கவில்லையே!’