பெயர்ச்சொல்
- 1
(முற்காலத்தில்) அரசனால் வழங்கப்பட்ட நிலம்குறித்த அதிகாரபூர்வமான தகவல் அல்லது அரசனுடைய வெற்றி போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி பொறிக்கப்பட்ட செப்புத்தகடு.
- 2
ஒருவருடைய சேவையைப் பாராட்டி உரிய விபரங்கள் பொறித்து வழங்கப்படும் உலோகத்தால் ஆன தகடு.
‘விழாவில் அமைச்சர் சிற்பிகளுக்குத் தாமிரப் பட்டயம் வழங்கிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்’
பெயர்ச்சொல்
- 1
(ஒரு துறையில்) பட்டப் படிப்பைவிடக் குறைந்ததாகவும் சான்றிதழ்ப் படிப்பைவிட உயர்ந்ததாகவும் இருக்கும் படிப்பு.
‘கணினியியலில் பட்டயச் சான்றிதழ்’