பெயர்ச்சொல்
- 1
ஆண்டி.
‘குளத்தை ஒட்டிய மண்டபத்தில் பண்டாரங்கள் படுத்திருந்தனர்’ - 2
வீடுகளில் சடங்குகளைச் செய்விக்கும், சில கோயில்களில் பூஜை பொறுப்பை மேற்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்.
‘இந்தப் பிள்ளையார் கோயிலில் பண்டாரம்தான் பூஜைசெய்வார்’ - 3
(மடத்தைச் சேர்ந்த) சைவத் துறவி.
பெயர்ச்சொல்
- 1
(பழம்பெரும் கோயில், மடம் போன்றவற்றில்) புழக்கத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைக்கும் அறை.
‘தினந்தோறும் இரவு பூஜை முடிந்ததும் பண்டாரத்தைப் பூட்டிச் சாவியைச் சுவாமி சன்னிதியில் வைத்துவிடுவார்கள்’