தமிழ் பண்ணை யின் அர்த்தம்

பண்ணை

பெயர்ச்சொல்

 • 1

  (கிராமத்தில்) பெருமளவில் விவசாயம் செய்வதற்குத் தேவையான வயலையும் தோட்டத்தையும் கால்நடைகளையும் கொண்ட தனியார் சொத்து.

 • 2

  (வணிக ரீதியில் பயிர்கள், செடிகள் போன்றவை) பெருமளவில் வளர்க்கப்படும் இடம் அல்லது அப்படி வளர்க்கப்படுபவையோ அவற்றின் பொருள்களோ விற்கப்படும் இடம்.

  ‘நாற்றுப் பண்ணை’
  ‘பால் பண்ணை’

 • 3

  சில உயிரினங்களைப் பெருமளவில் வளர்க்கும் இடம்.

  ‘முதலைப் பண்ணை’
  ‘பாம்புப் பண்ணை’
  ‘கோழிப் பண்ணை’